தொழில் மற்றும் வெற்றிகர தொழில் முன்னேற்றம்
நீங்கள் ஒரு தொழிலைத் தேடுகின்றீர்களா? நீங்கள் தொடர்ந்து கற்க விரும்புகின்றீர்களா? இப் பக்கத்தில் நீங்கள் தொழில், தொழில் தேடுதல் மற்றும் தொடர்ந்து கற்கும் விடயங்கள் குறித்த சகலவிதமான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
நான் எனது வதிவிட அனுமதியுடன் தொழில் செய்ய முடியுமா?
-
பேர்ண் மாநிலம் இந்த விடயம் குறித்து இத்தளத்தில் தகவல்களை வழங்குகின்றது Hallo-Bern.ch.
- வதிவிட அனுமதி B, C, L, F, N மற்றும் வேறு வதிவிட அனுமதித் தலைப்புகள் குறித்து அடிக்கடி எழும் கேள்விகளுக்கான பதில்களை குடிவரவாளர்களுக்கான அரசசெயலரின் SEM இணையப் பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE, FR, IT, EN).
வெறுமையாகவுள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து நான் எங்கே அறிந்து கொள்ளலாம்?
சுவிசில் தொழில் தேடுவது மற்றும் தொழில் விடயங்கள் குறித்த தகவல்களை நீங்கள் இந்த இணையத்தளத்தில் காணலாம் Berufsberatung.ch (DE, FR, IT, RM).
தொழில் வெற்றிடங்களை இணையத்தளத்தில் பொதுவாகத் தேடும் தளங்கள் ஊடாக அல்லது தொழில் வழங்குனர்களின் இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம். இங்கே உதாரணமாக சில தொழில் தேடும் தளங்கள்:
- www.jobs.ch
- www.jobscout24.ch
- www.jobup.ch
- www.jobagent.ch
- www.indeed.ch
- www.berner-stellen.ch
- www.100000jobs.ch
பொதுவான தொழில் தேடும் தளங்கள்:
பேர்ண் நகரில் பெரிய தனியார் நிறுவனங்களின் தொழில் தேடும் தளங்கள்:
ஒரு தொழிலைத் தேடுவதற்குää எவர் எனக்கு உதவுவார்?
- பேர்ண் நகரத்தின் தொழில் ஆலோசனை- மற்றும் தகவல் நடுநிலையம் தொழில், உயர்கல்வி மற்றும் வெற்றிகர தொழில் முன்னேற்றம் குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஆலோசனை வழங்குகிறது. மேலதிக தகவல்களை BIZ Bern இணையத்தளத்தில் நீங்கள் காணலாம் (DE, FR).
- குடிவரவாளர்களுக்கான துறைசார் நிலையம் ஐளயஇ தொழில் விடயங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் ஆலோசனை வழங்குகின்றது. டொச் மொழியிலான தகவல்களை ISA இணையத்தளத்தில் நீங்கள் காணலாம் (DE).
- பேர்ண் நகரம் தராதரமுடைய குடிவரவாளர்களுக்கான தொழில் வலைப்பின்னல் திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் பெயர் Bernetz இது குறித்த தகவல்களை நீங்கள் Bernetz இணையத்தளத்தில் காணலாம் (DE).
- அனைவருக்குமான பாண் (HEKS) எனும் HEKS அமைப்பு மற்றும் உகன அமைப்புää ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கு ஒரு தொழிலைத் தேடும் திட்டத்திற்கான நிகழ்வுகளை வழங்குகின்றனர். டொச் மொழியிலான தகவல்களை ர்நுமுளு HEKS இணையத்தளத்தில (DE, FR, EN) மற்றும் cfd இணையத்தளத்தில் (DE) நீங்கள் காணலாம்.
- SAH -படிப்புகள்: சுவிஸ் தொழிலாளர் உதவி வலையமைப்பு «Netzwerk Schweizerisches Arbeiterhilfswerk» (SAH) துப்புரவு மற்றும் சில்லறை விற்பனை பற்றிய படிப்புகளை வழங்குகிறது. படிப்புகள் தத்துவார்த்த அறிவு, நடைமுறை பயிற்சிகள் மற்றும் தொழில் சார்ந்த ஜெர்மன் மொழி ஆகியவற்றை வழங்குகின்றன. அவை சுவிஸ் தொழில் சந்தை பற்றிய தகவலை வழங்குவதுடன், வேலை தேடுவதற்கான உதவிகளையும் வழங்குகின்றன. FOKUS Fachkurse சிறப்பு படிப்புகளின் இணையதளத்தில் கூடுதல் தகவல். (DE)
ஆவணங்களைப் புரிந்துகொண்டு விண்ணப்ப சுயவிபரத்தை உருவாக்க யார் எனக்கு உதவுவார்கள்?
- உங்களுக்கு புரியாத ஆவணம் கிடைத்ததா? கரித்தாஸ் எழுத்துச் சந்திப்பு ஆதரவளிக்கிறது. விண்ணப்பங்களை எழுதவும் ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சலுகை இலவசம். மேலதிக தகவல்களை கரித்தாஸ் Webseite von Caritas (DE) இணையத்தளத்தில் காணலாம்.
- TRiiO (DE) ஆலோசனை மையம் விண்ணப்பக் கோப்புகளைத் தயாரிக்க உதவுகிறது. இது பல்வேறு தலைப்புகளில் ஆலோசனைகளையும் வழங்குகிறது. விண்ணப்பங்கள் என்ற தலைப்பில் படிப்புகள் மற்றும் பட்டறைகளும் உள்ளன.
நான் எவ்வாறு சுவிஸ் நாட்டுக்காக எனது டிப்ளோமாவை அங்கீகரிக்கச் செய்வது?
- பேர்ண் நகரம் இவ்விடயம் குறித்து இங்கே தகவல்களை வழங்குகின்றது Hallo-Bern.ch.
- கல்விää ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான அரசசெயலர் (SBFI) வெளிநாட்டு டிப்ளோமாக்களை அங்கீகரிப்பதற்குப் பொறுப்பு வகிக்கின்றார். இது குறித்த தகவல்களை நீங்கள் SBFI இணையத்தளத்தில் காணலாம் (DE, FR, IT, EN).
- பல்கலைக்கழக டிப்ளோமாக்களை ஏற்றுக்கொள்வதற்கு Swissuniversities பொறுப்பு வகிக்கின்றது. இது குறித்த தகவல்களை பின்வரும் Swissuniversities இணையத்தளத்தில் நீங்கள் காணலாம் (DE, FR, IT, EN).
நான் எவ்வாறு ஒரு தாபனத்தை நிறுவுவது?
- சொந்தமாகத் தொழில் செய்வது குறித்த தகவல்கள் மற்றும் செயல்முறை எடுத்துக்காட்டல்களை நீங்கள் இங்கே காணலாம் ch.ch (DE, FR, IT, RM, EN).
- பேர்ண் நகரம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது Hallo-Bern.ch.
எங்கு நான் ஒரு தொழிற்பயிற்சிää ஒரு தொழிற்கல்வி அல்லது தொடர் கல்வியைப் பெறலாம்?
- தொழில்- மற்றும் தொடர்கல்வி மற்றும் தொழில்பயிற்சிக்கான தகவல்களை நீங்கள் இங்கே காணலாம் berufsberatung.ch (DE, FR, IT, RM).
- சுவிசின் கல்வித்திட்டம் குறித்த தகவல்களை எமது பாடசாலை மற்றும் கல்வி எனும் பக்கத்தில் நீங்கள் காணலாம்.