Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

பாடசாலை மற்றும் கல்வி

சுவிசில் பாடசாலை எவ்வாறு செயற்படுகின்றது? பாடசாலை சமூகசேவை என்றால் என்ன? நான் எவ்வாறு பொருத்தமான தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி குறித்து அறிந்துகொள்வது? இப் பக்கத்தில் இவ் விடயம் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.

கல்வித்திட்டம்

  • நீங்கள் பேர்ண் நகரத்தில் வசித்தால், நீங்கள் உங்கள் பிள்ளையை பாலர் பாடசாலை மற்றும் பாடசாலைக்கு (1. தொடக்கம் 9. வகுப்பு வரை) பாடசாலைத் திணைக்களத்தில் பதிவுசெய்ய வேண்டும் (DE).
  • பேர்ண் மாநிலம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது Hallo-Bern.ch.
  • «Deutsch lernen vor dem Kindergarten» «பாலர்பாடசாலைக்கு முன்பாக டொச் கற்றல்»  என்பது பேர்ண் நகரத்தின் ஒரு ஊக்குவிக்கும் வசதியாகும். இது பாடசாலைக்கு முன்பான வயதுள்ளவர்கள், குறைவாக அல்லது டொச் மொழி எதுவும் பேசாதவர்களை நோக்காகக் கொண்டது. இது குறித்த தகவல்களை நீங்கள் இங்கே காணலாம்  Primano -இணையப்பக்கம் (DE). 
  • பேர்ண் நகரம். இதுவரை குறைவாக அல்லது டொச் மொழி பேசாத பிள்ளைகள் மற்றும் இளையோர்களுக்கு தீவிர மொழிப்பாடங்களை வழங்குகின்றது (DE). 
  • பேர்ண் மாநிலம் «பிரதேச தீவிர பாடத்திட்டம்  PLUS» (RIK+) எனும் திட்டத்தை 13 தொடக்கம் 17 வயது வரையான இளையோருக்கு வழங்குகின்றது. மேலதிக தகவல்களை நீங்கள் பாலர்பாடசாலை, மக்கள்பாடசாலை மற்றும்  AKVB ஆலோசனைக்கான திணைக்களங்களின் இணையப்பக்கங்களில் காணலாம் (DE, FR). 

கட்டாய பாடசாலையின் பின்னர்

உங்களுக்கு இந்தவிடயம் குறித்து மேலதிக கேள்விகள் இருந்தால், பேர்ண் நகரத்தின் குடிவரவாளர்- மற்றும் இனஒதுக்கல்கள் குறித்த கேள்விகளுக்கான துறைசார் நிலையத்தை Fachstelle für Migrations- und Rassismusfragen அல்லது  isa Bern ஐ தொடர்பு கொள்ளுங்கள்.   

 

உயர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் டிப்ளோமை அங்கீகரித்தல்:

மானியங்கள் என்பது, ஒரு தொழிற்கல்வி கற்க விரும்பும் நபர்களுக்கான நிதி உதவியாகும். ஒரு மானிய உதவியை முதல்முறை தொழிற்கல்வி கற்பவர்கள் மட்டும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுவிசிற்கு வரும் நபர்கள் மட்டும் பெறுவார்கள், மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் நபர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்திருந்தால் மட்டுமே இதைப் பெறுவார்கள்.  

  • பேர்ண் மாநிலம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது  Hallo-Bern.ch.
  • கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான அரசசெயலர்  (SBFI) தனது இணையப் பக்கத்தில், எவ்வாறு வெளிநாட்டு டிப்ளோமாக்களை அங்கீகரிக்கச் செய்யலாம் என்பது குறித்து விளக்கியுள்ளார் (DE, FR, IT, EN). 

Weitere Informationen.

Fusszeile