Navigieren auf Stadt Bern

Benutzerspezifische Werkzeuge

Content navigation

தஞ்சம்

நீங்கள் சுவிசில் தஞ்சம் கோரியுள்ளீர்களா? உங்களுக்கு விபரங்கள் தேவையா? நீங்கள் சுவிசில் தொழில் செய்ய விரும்புகின்றீர்களா? நீங்கள் உங்கள் குடும்பத்தை சுவிசுக்கு அழைக்க விரும்புகின்றீர்களா? இந்த விடயங்கள் குறித்து இப்பக்கத்தில் தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

  • Schweizerische Flüchtlingshilfe (SFH) எனும் சுவிஸ் அகதிகள் உதவி அமைப்பு தஞ்ச விசாரணை நடைமுறை குறித்து விபரம் வழங்குகின்றது. (DE, EN, FR)
  • குடிவரவாளர்களுக்கான அரசசெயலரின் SEM, தொழில் மற்றும் தொழில் அனுமதிகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள். (DE, EN, FR, IT)
  • பேர்ண் நகரம் இந்த விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது Hallo-Bern.ch
  • பேர்ண் மாநில இணையத்தளத்தில், உள்பயணிப்பது மற்றும் தங்கியிருத்தல், தொழில் மற்றும் தஞ்ச விடயங்கள் பற்றிய அனைத்து முக்கிய தொடர்பு நிலையங்கள் குறித்தும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். (DE, FR)
  • பேர்ண் நகரத்தில் தஞ்சம் கோரியவர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளுக்கு பேர்ண் நகரத்தின் தஞ்சசமூகசேவை Asylsozialdienst பொறுப்பு வகிக்கின்றது. (DE)
  • Rechtsberatungsstelle für Menschen in Not தேவையில் உள்ள மக்களுக்கான சட்ட ஆலோசனை நிலையம் தஞ்சம் கோருவோர் மற்றும் குறைவான பணம் உள்ளோருக்கு, இலவசமாக சட்டஉதவியை வழங்குவர். (DE, FR, IT, EN)
  • Schweizerischen Flüchtlingshilfe இணையத்தளத்தில் சுவிஸ் முழுவதிலும் உள்ள சட்ட ஆலோசனை நிலையங்களின் பட்டியலை நீங்கள் காணலாம். (DE, FR)

 

Sui SRC செயலி சுவிஸில் உள்ள வாழ்க்கை பற்றிய தகவலை வழங்குகிறது. மன அழுத்தம் மற்றும் கவலையை எவ்வாறு கையாள்வது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் அது வழங்குகிறது. உங்கள் மொழியில் ஒரு நபருடன் அரட்டையடிக்க அந்த செயலி  உங்களை அனுமதிக்கிறது. இந்த நபரும் புலம் பெயர்ந்தவராக இருப்பார். அவர் உங்களைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு உதவ முடியும்.

இந்த செயலி தற்போது ஜெர்மன் மற்றும் அரபு மொழிகளில் கிடைக்கிறது. மற்ற மொழிகள் தொடரும்.

Weitere Informationen.

Fusszeile