அவசர வேளைகள் மற்றும் ஆலோசனை நிலையங்கள்
நீங்கள் பொலிசாரைää அல்லது நோயாளர் வண்டியை தொலைபேசி ஊடாக அழைக்க வேண்டுமா? நீங்கள் வன்முறையை எதிர்கொள்கின்றீர்கள் அதனால் உதவி தேவைப்படுகின்றதா? உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சினை உள்ளதா? நீங்கள் பெற்றோராக அதிக அழுத்தத்தில் உள்ளீர்களா? இந்தப் பக்கத்தில் முக்கிய அவசர அழைப்பு இலக்கங்கள் மற்றும் ஆலோசனை நிலையங்கள் குறித்த இணையத் தொடர்புகளைக் காணலாம்.
அவசர வேளைகள்
ஒரு அவசரவேளையில் என்ன செய்வது? முக்கிய அவசரவேளை இலக்கங்களை நீங்கள் பேர்ண் நகர இணையப்பக்கத்தில் காணலாம் (DE).
பேர்ண் மாநிலம் முக்கிய அவசரவேளை அழைப்பு இலக்கங்களை பல மொழிகளில் Hallo-Bern.ch இல் ஒன்றுசேர்த்து வழங்கியுள்ளது.
ஆலோசனை நிலையங்கள்
பேர்ண் மாநிலம் ஆலோசனைகள் மற்றும் ஆலோசனை நிலையங்கள் குறித்த தகவல்களை Hallo-Bern.ch இல் வழங்கியுள்ளது. ஒரு பொதுவான மற்றும் குறிப்பிடக்கூடிய விடயங்களான சட்ட ஆலோசனை, ஒதுக்குதல்களிலிருந்து பாதுகாப்பு, பெண்களுக்கான ஆலோசனை, போதைக்கு அடிமையாதல் மற்றும் வேறு விடயங்களை நீங்கள் இதில் காணலாம்.