வசித்தல், ஓய்வுநேரம், அசைதல்
நீங்கள் ஒரு வீட்டைத் தேடுகின்றீர்களா? நீங்கள் வீடு மாற விரும்புகின்றீர்களா? உங்களுக்கு சுவிசில் ஒரு சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படுகின்றதா? எவ்விதமான ஓய்வுநேரத்தைக் கழிக்கும் வசதிகள் உள்ளன என்பதை அறிய விரும்புகின்றீர்களா? இப்பக்கத்தில் இவ் விடயங்கள் குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.
நான் இப்போதுதான் பேர்ண் நகரத்துக்கு வந்துள்ளேன். எங்கு நான் என்னைப் பதிவுசெய்ய வேண்டும்?
- நீங்கள் பேர்ண் நகருக்கு புதிதாக வந்திருந்தால், நீங்கள் கட்டாயமாக உங்களை Einwohnerdiensten, Migration und Fremdenpolizei எனும் அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
எங்கு நான் ஒரு வீட்டைத் தேடலாம்?
- «சுவிசில் வசித்தல்» எனும் குறிப்பேடு பல மொழிகளில் சுவிசில் வாடகை வீடு குறித்து தகவல் வழங்குகின்றது.
- இணையவழி-வாடகைவீட்டு விளம்பரங்களில் நீங்கள் தேடலாம்இ உதாரணமாக
Immobilien Stadt Bern
comparis.ch
immoscout24.ch
tutti.ch
எனது வாடகைவீட்டுக்கு அல்லது வீட்டுக்கு எவ்வித காப்புறுதிகள் தேவை?
- ஒரு தனிப்பட்ட சொந்தப் பொறுப்புக் காப்புறுதி ஊடாக நிதிச் சிக்கல்கள் ஏற்படுவதிலிருந்து நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். மேலதிக தகவல்களை மாநில இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் Hallo-Bern.ch.
ஒரு ஆண் அல்லது பெண் வாடகைதாரராக எனது உரிமைகள் மற்றும் கடமைகள் என்ன?
- இவ்விடயம் குறித்த மேலதிக தகவல்களை மாநில இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் Hallo-Bern.ch. இத்துடன் சேர்ந்ததாக நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தால், வாடகை ஒப்பந்தம் குறித்த தகவல்களும் உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் அடங்கியிருக்கும்.
- பேர்ண் மாநிலத்தின் சமரசம் செய்யும் திணைக்களம் (Rechtsberatung) வாடகை மற்றும் வசிப்பது குறித்த கேள்விகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்குகின்றது (DE, FR).
எங்கு மற்றும் எவ்வாறு குப்பைகளை அகற்றுவது?
- பேர்ண் நகரம் எப்போது மற்றும் எங்கு குப்பைகளை அகற்றலாம் மற்றும் மறுசுழற்சிசெய்யலாம் என்பது குறித்து அறியத்தரும் (DE).
நான் எனது வீட்டை எவ்வாறு சரியாகக் காற்றோட்டம் செய்வது?
- பேர்ண் நகர சுகாதாரசேவை இவ்விடயம் குறித்து அறியத்தரும் (DE).
எனக்கு மேலும் கேள்விகள் உள்ளன. எங்கு நான் வசிக்கும் விடயங்கள் குறித்து மேலதிக தகவல்களைப் பெறலாம்?
- «Hallo Nachbar!» எனும் திட்டம் ஒன்றுசேர்ந்து வாழ்வது குறித்த பொதுவான விதிகளை பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது. மேலதிக தகவல்களை பேர்ண் நகரத்தின் இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம்.
-
பேர்ண் மாநிலம் இவ்விடயம் குறித்த தகவல்களை இங்கே வழங்குகின்றது Hallo-Bern.ch இதில் வசித்தல், வானொலி மற்றும் தொலைக்காட்சிக் கட்டணம் (SERAFE-Rechnungen) மற்றும் குப்பை அகற்றல் குறித்த தகவல்களும் அடங்கியிருக்கும்.
பொதுப்போக்குவரத்து எவ்வாறு இயங்குகின்றது?
- BernMobil இணையப்பக்கத்தில் பேர்ண் நகரத்தின் பயண அட்டவணை குறித்த தகவல்களை நீங்கள் காணலாம்.
- Der LIBERO கட்டண ஒன்றியம் பேர்ண் மாநிலத்திற்குள் பயணச்சீட்டுகள், சந்தாக்கள் மற்றும் நாள் பயணச்சீட்டுகளை வழங்குகின்றது (DE, FR).
- பயணச்சீட்டுகள் மற்றம் சந்தாக்கள் குறித்த பொதுவான தகவல்கள் அதேபோன்று உள்நாட்டு மற்றும் சர்வதேச பயண அட்டவணைகளை நீங்கள் SBB-இணையப்பக்கத்தில் காணலாம் (DE, FR, IT, EN).
எவ்வளவு காலம் நான் எனது வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கலாம்?
நீங்கள் ஒரு வேறுநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ளீர்களா? நீங்கள் பன்னிரெண்டு மாதங்களுக்கு மேற்பட்டு அதனுடன் சுவிசில் வாகனம் செலுத்த அனுமதியில்லை. மேலதிக தகவல்களை பேர்ண் மாநில வீதிப்போக்குவரத்துத் திணைக்கள இணையப்பக்கத்தில் நீங்கள் காணலாம் (DE, FR).
எங்கு நான் எனது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றலாம்?
நீங்கள் உங்களது வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்ற விரும்பினால், உங்கள் விண்ணப்பம் மற்றும் தேவைப்படும் பத்திரங்களை நேரடியாக எடுத்து வரவேண்டும்.
இந்த விடயம் குறித்த மேலதிக தகவல்களை பேர்ண் மாநிலம் இதில் வழங்குகின்றது Hallo-Bern.ch.
எங்கு நான் நகரில் நடைபெறும் ஓய்வுநேர நிகழ்வுகள் குறித்த மேலதிக தகவல்களைப் பெறலாம்?
பேர்ண் ஒரு சிறிய, ஆனால் உயிர்த்துடிப்பான நகரம். பூங்காக்கள், சந்தைகள், விளையாட்டுத் திடல்கள், ஓய்வுநேர- மற்றும் விளையாட்டு வசதிகள் மற்றும் வேறு நிகழ்வுகளை பேர்ண் நகர இணையப்பக்கத்தில் - இலவசமாக அல்லது மலிவான கட்டணங்களில் - கண்டறிந்து கொள்ளுங்கள் (DE).
குறைவான பணமுள்ள நபர்கள் ஒரு KulturLegi பெற்றுக்கொள்வார்கள். KulturLegi உடன் பல கலாச்சார-, விளையாட்டு, ஓய்வுநேர- மற்றும் கல்வி வசதிவாய்ப்புகளுக்கு (மொழிவகுப்பு உட்பட) பேர்ண் மாநிலத்தில் மற்றும் சுவிஸ் முழுவதும் 30 விழுக்காட்டுக்கு மேலான கட்டணக் குறைப்பால் நீங்கள் இலாபமடைவீர்கள் (DE, FR).